Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Kadhal Azhivathillai »

Kadhal Azhivathillai

Movie: Kadhal Azhivathillai

காதல் அழிவதில்லை கடல்
அலைபோல் ஓய்வதில்லை
வா வென்றால் வருவதில்லை
காதல் போவென்றால் போவதில்லை
... நெனச்சா நெனச்சதுதான்
யாரும் அழிச்சாலும் அழியாது

ஆ..ஆ..

காதல் காதல் அது அழிவதில்லை
அலைகள் அலைகள் அது ஓய்வதில்லை

பல்லவி 1:

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ஒரு முறை நெனச்சிவிட்டால்
மறக்கவும் முடியாது
நெருப்பு வெச்சு சுட்டா கூட
காதல் நெஞ்சு வேகாது
உயிரே உனக்கது தெரியாதா
காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
.... நீ சொன்னது சொன்னதுதான் தாங்கலியே
சொல்லடி சொல்லடி என் காதலியே
.... நீ சொன்னது சொன்னதுதான் தாங்கலியே

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

பெத்தவங்க ஒத்துகொண்டா
நீயும் நானும் காதலிச்சோம்
மத்தவங்க ஒப்புதல் தந்தா
நீயும் நானும் சந்திச்சோம்
கண்ணும் கண்ணும் பார்த்து கொள்ள
காதலும் தான் மலர்ந்தது
நெஞ்சும் நெஞ்சும் நினைத்து கொள்ள
நேசமும் தான் வளர்ந்தது
அந்தஸ்த்தையும் பணத்தையும் மட்டும்
பெற்றோர் சிலர் மதிப்பாங்க
அன்பு வெச்ச புள்ளைங்க மனச
பிரிச்சு வைக்க பார்ப்பாங்க
பத்திரிகை அடிச்சாலும்
பத்து கைகள் தடுத்தாலும்
.... நிர்ப்பந்தமே செஞ்சாலும்
நிச்சயமே முடித்தாலும்
அணை போட்டா வெள்ளம் நிற்குமே
அணை போட்டா உள்ளம் நிற்குமா
அணை போட்டா காதல் உள்ளம் நிற்குமா
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

ஆ..ஆ..

ஜாதி மத மொழியையெல்லாம்
கடந்ததுதான் காதலடி
சொந்த பந்த எதிர்ப்பையெல்லாம்
மீறி நிற்பதே காதலடி
பெண்கள் சமையத்தில் பெத்தவங்க
ஆட்டி வைக்கும் பொம்மையடி
காதலன் என்னை வெறுப்பதாய் நீ
சொல்வதில் இல்லை உண்மையடி

எதிப்புகள் வந்தா கூட
எதிர்னீச்சல் அடிக்கணும்டி
தேசம் விட்டு கடத்தினாலும்
துணிந்த காதல் ஜெயிக்குமடி
சட்டம் போட்டு தடுத்தாலும்
திட்டம் போட்டு வதைத்தாலும்
ஊரு கூடி எதிர்த்தாலும்
உடம்பு ரெண்ட பிரிச்சாலும்
உதடு வேணா மாறி பேசும்
உள்ளம் மட்டும் மாறாது
காதல் உள்ளம் மட்டும் மாறாது



Views: 9421
Date added: 04 November, 2006
Lyrics: