|
« Song - Ore Manam »
|
 | Ore Manam
Movie: Villan
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்
இதே தினம் இதே கணம் இதம் பதம் சதம்
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
பள்ளி நாளில் அரும்பாய் இருந்தேன்
பருவ நாளில் முகையாய் எழுந்தேன்
பார்வை உசுப்ப மடல்கள் அவிழ்ந்தேன்
ஸ்பரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்
மலரே உந்தன் மடல்கள் தோறும் மஞ்சம் அமைப்பேன்
கனியாய் மாறும் ரசபாகங்கள் கற்றுக்கொடுப்பேன்
கனியானாலும் மலரின் வாசம் வாரிக்கொடுப்பேன்
வாழ்வை ரசிப்பேன்..
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்
மாலை நேர நிழலை போலே
மனதில் மோகம் நீழ்வதனாலே
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்
சேவை செய்யும் ஆசையினாலே
தேகத்துக்குள் தூங்கும் இன்பம் தட்டி எழுப்பு
தேடி தேடி செல்களில் எல்லாம் தேனை நிறப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது உந்தன் பொறுப்பு
உள்ளே நெருப்பு....
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்
இதே தினம் இதே கணம் இதம் பதம் சதம்
Views: 4173 Date added: 03 January, 2007 Lyrics: | |
|
|
| |