IPB

Welcome Guest ( Log In | Register )

 
Reply to this topicStart new topic
உலக சினிமா இயக்குநர்
butterflysurya
post Mar 17 09, 09:56 AM
Post #1


காலாட்படை
*

Group: Members
Posts: 1
Joined: 17-March 09
From: சென்னை, இந்தியா
Member No.: 3,383
Age: 35



ஹாங்காங் திரை உலகின் முடிசூடா மன்னன் தான் Wong Kar Wai.


ஷாங்காயில் பிறந்தது 17 ஜீலை 1958 . இவரது பெற்றோர்கள் இவருக்கு 5 வயது இருக்கும் போது ஹாங்காகிற்கு இடம் பெயர்ந்தனர். ஷாங்காய் மொழியும் மேண்ட்ரின் மொழியும் மட்டுமே பேச தெரிந்த இவர் காண்டனோசி பேசும் ஹாங்காங்கில் சிறிது சிரம்ப்பட்டார்.
தனது ஆர்வத்தாலும் சிறுவயதில் தாயுடன் பல திரைப்ப்டங்களை பார்த்தே காண்டனோசி மொழியை கற்று கொண்டார்.

1980ல் பாலிடெக்னிக்கில் கிராபிக் டிசைனில் டிப்ளமோ முடித்தார். பிறகு ஹாங்காங் தொலைகாட்சியில் தயாரிப்பு சம்மந்தபட்ட வேலைகளுக்கான வேலையில் சேர்ந்தார்ர் 1981ல் கதையாசிரியரானார்.
பேட்ரிக் டாமின் திரைப்படங்களுக்கு கதையாசிரியாக பணியாற்ற துவங்கினார். கடந்த 18 வருடங்களில் தன்க்கென ஒரு திரை மொழியையே உருவாக்கி விட்டார் என்றால் அது மிகையாகாது..
இவரது திரைப்படங்களில் இசை ஒரு சிறப்பு. திரைப்படங்களுக்காக இசையா அல்லது இசைக்காக நகரும் காட்சிகளா என்று பிரித்து அறியாதபடியான ஒரு திரை அனுபவம் அது...

சிறு வயதில் ஹாங்காகின் தெருக்களில் தான் கேட்ட அனைத்து ஒரு வித வினோத இசையே தனது திரைப்ப்டங்களில் ஊடுருவி பார்ப்பவரின் உள்ளங்களின் ரீங்காரமிட வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார்.

As Tears Go By என்ற தனது முதல் திரைப்படத்தை 1988ல் இயக்கினார்.

1994 ல் இயக்கிய Chungking Express திரைப்படத்திற்க்கு பிறகே இவரை திரும்பி பார்க்க ஆரம்பித்தது திரை உலகம். இரண்டு போலீஸ்காரர்களின் வாழ்க்கை பற்றிய கதை. 223 என்ற எண்ணுள்ள போலீஸ்காரருக்கும் 663 என்ற எண்ணுள்ள போலிஸ்காரருக்கும் ஏற்பட்ட தனித்தனி காதல் அனுபவத்தை இருவரது கதையும் ஒன்றாக கலந்திருப்பது போன்ற கதை.

இரண்டு காதல் கதைகள் என்ற மெலிதான உணர்வுகளை இந்த இருபதாம் நூற்றாண்டின் அதி வேக வாழ்க்கை அமைப்பையும் தன் மீது அன்பு செலுத்த யாராவது கிடைப்பார்களா என்று ஏங்குபவர்களாக இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்த திரைப்படம். பல பல புதிய உத்திகளையும் புதுமைகளையும் கையாண்ட விதம் அனைவரையும் அதிர வைத்தது..

1997ல் எடுக்கப்பட்ட Happy Together பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்ப்டம்.

இரு ஆண்களின் ஒரின சேர்க்கை பற்றிய காதல் கதையா அல்லது நட்பு பற்றியதா என்பதே மிகப்பெரிய சர்ச்சை.. அவர்களுக்குள் உடல் ரீதியாகவும் உறவிருக்கிறது. ஆனால் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டிருந்தார்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதே மையம். இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டி சென்றது..

In the Mood for Love 2000 ஆண்டு வெளிவந்தது.. இவரின் திரைவாழ்வையே புரட்டி போட்டது. இதுவும் ஒரு காதல் கதைதான். சம்பிரதாய காதல் அல்ல முற்றிலும் வித்தியாசமானது. அடுத்தடுத்த அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் திருமணமான ஆனால் அந்நியரிடம் எந்த வகையான உறவு என்று பெயரிடப்படாத இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. தனிமையும் வாழ்க்கையின் வெறுமையும் அவர்களுக்குள் காதலை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை இசையுடன் சேர்ந்த காவியம் என்று பார்த்தவரெல்லாம் பாராட்டினார்கள்.

மேலும் வாசிக்க:

http://butterflysurya.blogspot.com/search/...ong%20Kar%20Wai
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



Lo-Fi Version Time is now: 8 Sep 10 - 12:36 PM