IPB

Welcome Guest ( Log In | Register )

 
Reply to this topicStart new topic
சாணிக்கோணி
பவித்ரன்
post Jun 8 06, 02:31 PM
Post #1


அதிரதன்
**

Group: Members
Posts: 90
Joined: 27-February 06
From: Toronto, Canada
Member No.: 14என் நண்பன் மூலமா சினிமா சான்ஸ் ட்ரை பண்ணலாம்னு கதை ஒண்ணு ரெடி பண்ணி வச்சிருந்தேன். இப்படி சோகக் கதையாகும்னு நினைச்சுக் கூட பாக்கல. சோகத்தை அப்புறம் சொல்றேன். முதல்ல கதையைக் கேளுங்க. அருமையான கிராமத்து சப்ஜெக்ட். கிராமத்து மணம் படம் முழுசும் வீசும். நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கே போகப்போகப் புரியும்.

ஹீரோ அமெரிக்காவில பொறந்து வளர்ந்தவர். அப்பா அக்மார்க் தமிழ் - கரிசப்பட்டிக்காரர். வெள்ளைக்காரியக் கல்யாணம் பண்ணிட்டு அங்கியே செட்டில் ஆனவர். ஆனா அம்மா அப்பா மேல ரொம்பப் பாசம். ஹீரோ காலேஜ்ல படிக்கிறார். எருமைச்சாணியும் எரி வாயுவும்ங்கிற தலைப்பில ரிசர்ச் பண்ணப் போறதா சொன்னதும் கரிசப்பட்டில இல்லாத எருமைச் சாணியா. அப்படியே பாட்டி தாத்தாவையும் பார்த்துட்டு வான்னு அப்பா சொன்னதால் இந்தியாவுக்கு வர்றார்.

ஓபனிங் ஸீனே நெத்தியடி. ப்ளேன் சென்னைல லேண்ட் ஆகும் போது முன் டயர் பஞ்சர் ஆயிடுது. பைலட்டுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்தாங்க, ஆனா பஞ்சர் ஒட்டச் சொல்லித்தரலியேன்னு சிவாஜி ஸ்டைல்ல கோ-பைலட்கிட்ட கதற்றாரு. ப்ளேன் தாறுமாறா ஓடுது. முட்டாய் குடுக்கற பொண்ணுங்க பஞ்சர், பஞ்சர்னு கத்தறதை நம்ம ஹீரோ கேட்டுடறாரு. டக்னு எமர்ஜென்ஸி கதவைத் திறந்து ப்ளேனின் கூரை மேல ஏறி ஓடி காக்பிட் கண்ணாடில சறுக்கி டயருக்கு போயிடறாரு. நிமிர்ந்து பாத்தா ஒரு 200 மீட்டர் தூரத்தில முன்னாடி இன்னொரு ப்ளேன். ஒரு கைல பேலன்ஸ் பண்ணிக்கிட்டே பாக்கெட்ல இருக்கற சூயிங் கம்மை எடுத்து மெல்றார். 100 மீட்டர் தான் இடைவேளி. கம்மை எடுத்து டயர்ல ஒட்ட ட்ரை பண்றார். மிஸ் ஆயிடுது. இன்னும் 50 மீட்டர் தான். அடுத்த முயற்சியில கரெக்டா ஓட்டைய அடைச்சு பைலட்டுக்கு கட்டை விரலை உயர்த்தி காட்ட, பைலட் ப்ரேக் போட கிறீச்.. இரண்டடி கேப்ல ப்ளேன் நின்னுடுது. பைலட் மெதுவா எழுந்து கை தட்றார். உடனே எல்லாரும் கோரசாக எழுந்து கை தட்ட, க்ளோஸ் அப்ல ஹீரோ கண்ணடிச்சு சிரிக்க சைடில ஹீரோ பேர்...சூப்பரா இல்ல?

டைட்டில் முடிஞ்சதும் ஹீரோ கரிசப்பட்டில என்ட்ரி. டவுண் பஸ்ல எறங்கறார். வழக்கம் போல இரண்டு கிலோமீட்டர் நடந்து தான் போகணும். அமெரிக்காலேர்ந்து எடுத்துட்டு வந்த உருப்படியெல்லாம் மடிச்சு வச்ச சின்ன பையத் தூக்கிட்டு நடக்கிறார். தூரத்தில சிரிப்புச் சத்தம். ஓரு பெண் அருவில குளிச்சிட்டு இருக்கா கிராமத்துப் பெண்ணுக்கான எல்லா லக்ஷணங்களோடு. அதாவது மேல ஒரு கர்ச்சீப். கீழ ஒண்ணு. கூடவே பத்து பதினைந்து நண்டு சிண்டுகள். திறந்தவெளி பாத்ரூம் இல்லையா, அதனால பாடிக்கிட்டே குளிக்கிறா. பாட்டின் நாலு வரி இடைவெளிகளில் நண்டுகளின் கோரஸ். ஹீரோ மரத்துக்குப் பின்னாடி நின்னுட்டு ரசிக்கிறார். பாட்டு முடிஞ்சதும் வழக்கம் போல அந்தப் பெண் தண்ணில விழுந்து தத்தளிக்கிறாள். ஹீரோ விழுந்து காப்பாத்தி, உதடோடு உதடு வைத்து சிரிஞ்ச் மாதிரி தண்ணிய உறிஞ்சு எடுத்து துப்பியதும் முழிப்பு வந்துடுது. துணியெல்லாம்(!) தண்ணில போனதுனால வெட்கப்பட்டு மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கறா. ஹீரோ சட்டையக் கழட்டிக் குடுத்துட்டு பனியனோடு வீட்டுக்குப் போறார்.

பொண்ணுக்கு லவ் பத்திக்குது.

அப்புறம் தாத்தா பாட்டி செண்டிமெண்ட் ஸீன். எருமைச் சாணி ரிசர்ச் பத்தி சொல்றார் ஹீரோ. உடனே பாட்டி அட நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு சரியான ஊர் சுத்தி. இந்த ஊர்ல எந்த மாடு எங்க எப்போ சாணி போடுங்கிறது அவளுக்கு அத்துப்படின்னு சொல்லி அவளைக் கூப்பிடறாங்க. அந்தப் பொண்ணு நம்ம அருவிப் பொண்ணேதான். என்ன சஸ்பென்ஸ் இல்ல? ஹீரோவைப் பாத்ததும் அதுக்கு திரும்பவும் லவ் பத்திக்குது. இங்க தான் விஷயமே. அந்தப் பொண்ணு நம்ம ஹீரோயின் இல்ல. அது செகண்ட் ஹீரோயின். சூப்பர் ட்விஸ்ட் இல்ல?

இப்போ தான் ஹீரோயின் என்ட்ரி. ஹீரோயின் அவளோட கிராமத்து நண்பிகளோட மாந்தோப்பில வடை சாப்பிட்டு இருக்கா. மரத்துல இருந்த குரங்கு (ஏமாந்துட்டீங்களா?) வடையத் தூக்கிட்டு போயிடுது. அழுதுகிட்டே அப்பா கிட்ட சொல்றா. அப்பாவோட முகத்தை க்ளோஸ் அப்ல காட்றோம். கண் ரெண்டும் ரெட்டாயிடுது. வித்தியாசமான அனிமல் ப்ளானட் சவுண்ட் நிறைய விடுறார். இந்தப் புண்ணாக்கு பரமசிவத்தோட பொண்ணு கண்ல பன்னீர் வரலாம். கண்ணீர் வரவே கூடாதுன்னு வெறும் அம்மில கல்லத் தேய்க்கிற குரல்ல மிரட்டறார். டேய் முனியா, சனியா இன்னும் ஒரு மணி நேரத்தில அந்தக் குரங்கைக் கொன்னு வடைய எடுத்துட்டு வாங்கடான்னு ஆளுங்களை அனுப்பறார். அறுவா, கம்பு எல்லாம் எடுத்துட்டு அவங்களும் கிளம்பறாங்க.

ஹீரோவும் செகண்ட் ஹீரோயினும் தினமும் ரிசர்ச் பண்ணக் கிளம்பிடுவாங்க. ரோடெல்லாம் சாணி பொறுக்கிட்டு சாயங்காலம் கோணியோட திரும்புவாங்க. அப்படி ஒரு நாள் பொறுக்கிட்டு இருக்கும் போது தான் ஹீரோவைப் பாக்கிறா ஹீரோயின். ஹீரோயினுக்கு பயங்கர குசும்பு. சாணியில ஒரு ஓலை வெடிய ஒளிச்சு வச்சி பத்த வக்கிறா. ஹீரோவும் பொண்ணும் அதை எடுக்க, வெடி வெடிக்க ரெண்டு பேர் மூஞ்சியிலும் சாணி. கை தட்டி சிரித்து கலாட்டா பண்ணுது ஹீரோயின் கோஷ்டி. ஒரு பாட்டு ஸீன் கூட யோசிச்சு வச்சிருந்தேன்.

சாணி சாணி எருமச் சாணி
சாணியில கைய வச்சியே நீ-ன்னு

ஹீரோவும் ஹீரோயினும் மோதிக்கிறாங்க. இதுமாதிரி சேட்டைகள் நிறைய செய்றா ஹீரோயின்.

ஒரு நாள் ஹீரோயின் தோப்பில விளயாடும் போது மோதிரம் மிஸ் ஆயிடுது. தலைமுறை தலைமுறையா வந்த மாணிக்கக் கல் பதித்தது. ரொம்ப feel ஆயிடறாங்க. இங்க தான் கதையின் திருப்பு முனையே. வழக்கம் போல ஹீரோ சாணிய ஆராய்ச்சி பண்ணும் போது சாணிக்குள்ள ஹீரோயினோட மோதிரம். ஏதோ ஒரு எருமை புல்லோட மோதிரத்தையும் முழுங்கிடிச்சுன்னு ஸ்ட்ரைக் ஆகுது ஹீரோக்கு. மோதிரம் கிடைச்சதும் ஹீரோயினுக்கு குஷியாயிடுது. ராத்திரி மல்லாக்க படுத்துக்கிட்டே இதுவரைக்கும் பண்ணிய சேட்டையெல்லாம் ரீவைண்ட் பண்ணிப் பாத்து காமிரா முன்னாடி வாயில விரல வச்சிட்டு சிரிக்கிறா. ஹீரோ மேல அவளுக்கு லவ் பத்திக்குது. கட் பண்ணி ஒரு சாங்.

சாணிக்குள் மோதிரமா இது என்ன கனவா
மாணிக்கக் கல்லில் தொடங்கிய உறவா

ஹீரோகிட்ட மன்னிப்பு கேட்டதும் திடீர்னு ஹீரோவுக்கும் லவ் பத்திக்குது. ஆனா இது நம்ம ரெண்டாவது ஹீரோயின் பொண்ணுக்கு இன்னும் தெரியாது. ஓரு நாள் அந்த பொண்ணுக்கு பயங்கர காய்ச்சல். ஹீரோதான் ராத்திரி முழுக்க முழிச்சி ஒத்தாசை பண்றாரு. உனக்கு ஒண்ணும் ஆகாது, உனக்கு ஒண்ணுன்னா என் சாணில மண்ணுன்னு டயலாக் பேசறார். அத அந்தப் பொண் லவ்வுன்னு தப்பா புரிஞ்சுக்கிறா. கட் பண்ணி ஒரு ட்ரீம் சாங்.

சாணிய அள்ளும் சந்தனமே
நான் உன்ன நினச்சேன் நிதம் நிதமே
வீதில அலையுது பல எருமை
அதுக்கென்ன தெரியும் உன் அருமை

ஸ்விட்சர்லாண்ட்ல இந்த சாங் ஷ¥ட் பண்ணினா எப்படி இருக்கும்?

புண்ணாக்குக்கு அவங்க காதல் தெரிஞ்சதும் திரும்பவும் சவுண்ட் குடுக்கிறார். கோபத்துல கைல இருக்கிற எள்ளுப் புண்ணாக்கு எள்ளாகுது. அதே கோப லுக்கோட அடியாளுங்களைப் பார்க்கிறார். என்ன டைரக்டோரியல் ட்ச் கவனிங்க. ஹீரோவ தூள் தூளாக்கப் போன முனியனும் சனியனும் இன்ன பலரும் வழக்கம் போல அடி வாங்கிட்டு வர்றாங்க. இதுக்குள்ள அந்த ரெண்டாவது ஹீரோயின் பொண்ணுக்கு நம்ம ஹீரோ லவ் மேட்டர் தெரிஞ்சுடுது. சோகமாயிடறா. ஆனாலும் ஒன் சைடா லவ் பண்றா. அது தான் அவ கேரக்டர்.

புண்ணாக்கு திரும்பவும் முயற்சி பண்றார். இந்த தடவை ஹீரோ தினமும் தூக்கற சாணிக்கோணில Bomb வக்கிறார். நம்ம ரெண்டாவது ஹீரோயின் பொண்ணுக்கு விஷயம் தெரிஞ்சு ஓடி வர்றா. ஹீரோகிட்ட இருந்த சாணிக்கோணிய புடுங்கிட்டு ஓடறா. ஓடும் போதே bomb வெடிச்சு சாணிமயமாகி செத்துடறா. ஹீரோ பொங்கி எழுகிறார். சாணி மேல சத்தியம் பண்ணிட்டு புண்ணாக்கு வீட்டுக்கு போறார்.

புண்ணாக்கு குடவுனில் கிளைமாக்ஸ் சண்டை. புண்ணாக்கைத் தீர்த்துக் கட்ற சமயத்தில ஹீரோயின் அப்பா செண்டிமெண்ட் பேசி கெஞ்ச, புண்ணாக்கு திருந்த, அவங்க கல்யாணம் ஆகி அமெரிக்கா போக... சுபம். நடுநடுல சூப்பர் காமெடி ட்ராக் கூட ரெடி பண்ணியிருந்தேங்க.

சோகம்னு சொன்னேனே அத சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. விலாவரியா இத என் friend கிட்ட சொன்னது தான் நான் பண்ண தப்பு. அந்தப் படுபாவி, அத தன்னோட கதைன்னு சொல்லி டைரக்டர் வேற ஆயிட்டாங்க.

டைரக்டர் ஒவ்வோரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார். சாணி சந்தியா நடிக்கவில்லை பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பப்பிள் கம்மால் பஞ்சர் போடுவது தமிழ் சினிமாவுக்கல்ல சினிமா உலகுக்கே புதிது. சாணிக்கோணி - மணம்னு சன் டீவில விமர்சனம் கேட்டப்போ ரொம்ப feeling ஆயிடுச்சுங்க. உங்கள மாதிரி நாலு பேர் கிட்ட சொன்னா மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு தாங்க இத எழுதினேன்.


--------------------
உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை ஆனாலும் நீ கிடைத்தாய்...
Go to the top of the page
 
+Quote Post
Guest_Guest*
post Jul 3 07, 02:39 PM
Post #2

Guests


Super Kathai. Kumudthathirku yaen yeluthi podakoodathu?
Go to the top of the page
 
+Quote Post
Guest_Guest*
post Jul 3 07, 08:05 PM
Post #3

Guests


கதை ரொம்ப நல்லா இருந்தது.
நன்றி!
Go to the top of the page
 
+Quote Post
Guest_Guest*
post Aug 23 07, 12:05 PM
Post #4

Guests


QUOTE (Guest @ Jul 3 07, 08:05 PM) *
கதை ரொம்ப நல்லா இருந்தது.
நன்றி!

mmmmmmmmmmm nice ya
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 Lo-Fi Version Time is now: 26 Jul 17 - 12:31 AM