IPB

Welcome Guest ( Log In | Register )

 
Reply to this topicStart new topic
உண்மையான உழைப்புக்கு பலன் உண்டு
Guest_மோகன்*
post Jun 29 06, 09:32 PM
Post #1

Guests


உண்மையான உழைப்புக்கு பலன் உண்டு
பங்கிரியா என்னும் கிராமம் பார்க்க பசேல் என்று இருந்தது.அக்கிராமத்தின் அதிகாலை காட்சி அக்கிராம வாசிகளுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிசம்.மிகவும் இனிமையான குளிர்க்காற்று உடம்பை தளிவிச்செல்லும் அவ்வேளையில் கருவண்டுகளின் ரீங்காரமும்,பறவைகளின் கூவள்களும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடியன். அதிலும் குயிலின் கூவள் சண்டையற்ற புதிய பூமியில் இருப்பதாக ஒரு பிரமிப்பை தந்தன. அத்துடன் வயல்களில் வயல் காவளர்கள் நீள் காட்சட்டையுடன் பெரிய மீசையும் வைத்து கைகளை இரண்டு பக்கமும் நீட்டிக்கொண்டு இராப்பகலாக் தங்களின் தொழிலை சோம்பளின்றி செய்தன. அதிகாலை புட்களின் மேலுல்ல பனித்துளி வாணத்தின் வரைபடத்தை காட்டின.அக்கிராமத்தின் காலை காட்ச்சியைக்காண கண் கோடி வேண்டும்.அதனாலோ என்னவோ அந்த கிராமத்தில் இருக்கும் கிழடுகளுக்கு தொலைவில் இருக்கும் மாடு பசுவாஅல்லது காளையா என்பதை துள்ளியமாக கண்டு பிடிக்கிறார்கள்.
அந்த பசுமையான கிராமத்தில் பசுமையை விரும்பாத ஒரு ஜீவன் பெயர் லோகேஷ்வரன். அனைவரும் அவனை லோகேஷ் என்றே கூப்பிட்டனர். அவன் படிப்பில் பத்தாம் வகுப்பு முடித்தவன் ஆனால் அவன் எண்ணமோ B.ஏ முடித்ததாக இருந்தது. சரலமாக ஆங்கிலம் பேச முடியாவிட்டாலும் சுமாராக் பேசக்கூடியவன். அவன் பத்தாம் வகுப்பு முடித்து இரண்டு வருடம் முடிந்துவிட்டது.அவனுக்கு மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை அவனுடய முழு எண்ணமும் வெளி நாடு போக வேண்டும் என்று இருந்தது.அத்தோடு அவனுக்கு அக்கிராமத்து வாழ்க்கையை விட நகரவாழ்க்கை ரொம்ப உசத்தியாகவே தோன்றியது.
அதே கிராமத்தில் தர்ஷனி என்ற கட்டழகுப்பெண் இருந்தாள். அவளுக்கு எப்போதும் லோகேஷ் மீது ஒரு கண் இருந்தது.ஆனால் அவள் மீதோ பல கண்கள்...........(தொடரும்)

மோகன்
(இலங்கை தமிழன்)

பி.குரிப்பு :- இது என் சொந்த கட்பனை(கதையை அடுத்த பதிப்பில் முழுமையாக்க முயட்ச்சிக்கிரேன்)
Go to the top of the page
 
+Quote Post
Guest_மோகன்*
post Jul 16 06, 09:11 PM
Post #2

Guests


.....உண்மையாண உழைப்புக்கு பலன் உண்டு.....தொடர்ச்சி-(2)

ஒரு நாள் தன் ஆசையை அவள் அவனிடம் வெட்க்கதை விட்டே கூரி விட்டாள்.அதற்கு அவன் வாய்விட்டு சத்தத்துடன் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அவள் முகத்தை பார்த்து இங்க பாரு நீ மட்டும் இல்ல இந்த கிராமத்துல ரொம்ப பொண்ணுங்க என்னை விரும்புராங்க நீயும் என்னை விரும்புரதுல எந்த ஆச்சரியமும் இல்லை.உன்னை மாதிரி பாவடை சட்டை போட்டவளோடு காலம் பூராவும் வேட்டி சட்டையோடு மம்முட்டியையும் தோள்ள போட்டுக்கொண்டு மண்ணை வெட்டிப்பொழைக்கிரதுக்கு இல்லை நான் பத்தாம் கிளாஸ் பாஸ் பண்னினன்.இங்க இருக்கிர மாடு மேய்க்கிர பையன்னு நினைக்காதே என்னை. என்னுடைய இலட்சியம் எல்லாம் வெளி நாட்டுக்குப்போய் கை நிரைய ஒழைச்சி ஜீன்ஸ்,டி- சர்ட் போட்ட ஒரு தேவதைய கல்யாணம் செய்துக்கிட்டு கொழும்புல வீடு வாங்கி தமிழ்பட ஈரோ மாதிரி வாழ போரென்.உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த பாலாப்போன பட்டிக்காட்டுல என்னால இருக்க முடியாது. நான் இங்க பொரந்ததுக்கே வெட்கப்படுரேன்.இந்த ஊர்ல என்ன இருக்கு ஒரு ரெண்டு மாடி கட்டிடம் இருக்கா??அல்லது ஒரு கார் இருக்கா??இந்க யாருகிட்டையும் அப்படி ஒரு வசதி இருக்கிரதா தெரியல. அத்தோட இந்த கிராமத்துக்கு ஒரு நாளைக்கு ரேண்டு தடவைதான் பஸ்ஸே வருது. அத விடு ஆசைக்கு பார்க்கிரதுக்கு சினிமா தியேட்டர் இருக்கா??அதிகம் வேண்டாம் சீமேந்தால கட்டின ஒரு வீடு இருக்கா?? எங்க பாரு ஒரே மண்ணா இருக்கு. என்று அவள் மீது சீறி விழுந்ததோடு உணக்குன்னு ஒரு மாடு மேய்க்கிரபய இருக்கத்தான் செய்வான் என்று கேலி சிரிப்பு சிரித்து விட்டு சென்றான்.அவளுக்கோ எந்த துக்கமும் இல்லை காரணம் அவளுக்கு வண்ண பூக்களின் வாசனையைவிட மண்வாசனையே ரொம்ப பிடிக்கும் என்பதாலே அவளும் அவனைபார்த்து வளமையாண சிரிப்பௌயே பூர்த்தாள்.
லோகேஷ் தன்னுடைய வெளி நாட்டுப்பயணத்தில் தீவிரமுயட்சி எடுக்க ஆரம்பித்தான்.தன்னுடைய அபிப்பிராயதை தன்னுடைய தந்தையிடம் கூரினான. இந்த முறை தந்தை எதுவும் கூரவில்லை காரணம் பலமுரை வாதாடி தன் மனைவியின் அன்புக்கட்டளையில் தோற்றுப்போனார். அம்மாவுக்கு அவன் செல்லப்பில்லை அவளும் ம்ண்ணின் பெறுமையை சொல்லிப்பர்த்தாள் அனைத்தும் அனைத்தும் செவிடன் காதில் ஊதும் சங்காகவே இருந்தது. கொழும்பில் அவனுடைய நண்பன் இருக்கிரான் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு போய் வெளி நாட்டுக்கு செல்ல தெவையாண ஆயத்தங்களை செய்யப்போகிரேன் என்று கூரி கொழும்புக்கு போவதற்கு தயார் ஆனான். இதற்கு முன் கொழும்பு நண்பன் கூரியபடி அவ்ன் ஊரிளிருந்து மூன்று பஸ் பிடித்து கொழும்பு பம்பலப்பிட்டியில் வந்து இரங்கினான்.இரங்கியவுடன் சுற்றி ஒரு முரை நோட்டம்மிட்டான். அவனை சுற்றி அழகாண கட்டிடங்களும்,பலவண்ணக்கல்ர்
ளில் வாகண்ன்க்களும் வேகமாக செல்வதை பார்த்து ரசித்தான்.வாகணங்களை விட மனிதர்கள் அவன் கண்களுக்கு கம்மியாகவே தென்பட்டது. அத்துடன் அவன் தன்னுடைய காட்சட்டையில் கையை விட்டு நண்பன் எழுதிக்கொடுத்திருந்த அதி நவீண சொகுசு விற்பனைனிலையத்தின் பெயரை வாசித்து மீண்டும் நோட்டமிட்டான்.அவன் கண்ணில் பெயர் பலகை தென்பட்டது. அவன் கண்களில் பெயர்ப்பலகை தென்பட்டதில் ஆச்சர்யம் இல்லை காரணம் அந்த விட்பனை நிலையம் ஜந்துமாடிக்கட்டிடம்.அத்துடன
அனைவரும் இலகுவில் காணக்கூடியதாக அதன் பெயர்ப்பலகை இருந்ததே அத்ற்க்கு காரணம்.அந்த கட்டிடத்தை கண்டவுடன் அவனுக்கு சிறிது பயமாகவே இருந்தது. மெதுவாக அந்த கட்டிடத்தை அடைந்தான். நுளைவாயில் கதவை பர்த்தான் கண்ணாடியைனாளன கதவு. பிடித்து திறப்பதற்கோ எந்த பிடிமானமும் காணவில்லை.அதனாள் ரெண்டு படி ஏரியவன் அத்துடன் நிருத்திக்கொண்டான்.யாராவது உள்ளே போகிரார்களா அன்று நோட்டமிட்டான். ஒரு இள்ம் வாளிபனும் அவன் காதலியும் அந்த கட்டிடத்துக்ள்ளே போக தயாரானார்கள்.அவர்கள் அந்த நுளைவாயிலின் அருகே போனதுதான் தாமதம் அந்த கண்ணாடிக்கதவு இருபக்கமும் பிரிந்து அவர்களுக்கு உள்ளே போக வலிவிட்டது.லோகேஷ்க்கோ ஆச்சரியம்.அவனும் சிறிது தயக்கத்துடன் அந்த நுளைவயுளுக்கு போனான் கண்ணாடிக்கதவு பிரிந்து வலிவிட்டது. உடனே உள்ளே போய் சுற்றிவர ஒரு பார்வை செலுத்தினான்.அவன் கண்ணே அவனாள் நம்பமுடியவில்லை.என்ன ஆச்சரியம் சிலர் படிகட்டில் ஏரி நிற்கிரார்கள் அந்த படிகட்டு அவர்களை மேலே கொண்டு போய்விடுகிரது.மற்றும் ஒரு புரத்தில் ஒரு கண்ணடிக்கூண்டு அதனுல் சிலர் போய் நிட்கிறார்கள் அது தானாகவே கதவு அடைப்பட்டு மேலே சென்று ஒவ்வொரு மாடி மாடியாகவும் நின்று நின்று போகிறது.அத்துடன் இவன் கனவு தேவதைகள் குட்டை பாவாடையில் அலைகிரதைக்கண்டு மெய்மறந்துப்போனான். அவன் கிராமத்தில் மழைக்குமுன் வீசும்காற்றில் குளிர்ச்சி இருக்கும் அதை அவன் அனுபவித்ததுண்டு. அதே குளிர்ச்சியை அந்த கட்டிடத்துக்குள்ளே போன்வுடன் உணர்ந்தான்.எல்லாம் அவனுக்கு வியப்பக இருந்தது. தன்னுடய நண்பன் அங்கே வேளைசெய்வதை நினைத்து பெருமைக்கொண்டான். அதன் பின் அவனருகே இருக்கும் காவளாளியிடம் சென்று நொம்பர தாஸய குமரேஷன் டெக்ஸ்டைல்ஸ் கொயேத தியன்னேன்னு(இலக்கம் பதினாரு குமரேஷன் டெக்ஸ்டைல்ஸ் எங்கே இருக்கிறது)என்று சிங்கள மொழியில் நண்பனின் வேலைசெய்யும் கடையை விசாரித்தான்.அவனுடைய கிராமத்தில் சிங்கள குடும்பங்களும் இருக்கும் காரணத்தால் சிறிது சிங்களமும் அரிந்து வைத்து இருந்தான். காவளாளி அவனுக்கு கடயைகாண்பித்தார். அவனுடைய நண்பன் இவனை கன்டவுடன் வாடா லோகேஷ் என்று அவனறுகே சென்று கட்டிப்பிடித்து கையுடன் கை குளிக்கி நலம் விசாரித்தான். அத்துடன் தனருகே இருந்த நபரிடம் இவனை அரிமுகம் செய்து வைத்துவிட்டு அவனுடைய வெலையை அவ்ர் தலையில் கட்டிவிட்டு அந்த சொர்க்க மாளிகையை அவனுக்கு சுற்றிகாட்டினான் .................... (தொடரும்)

மோகன்
(இலங்கை தமிழன்)

நேரமின்மையால் பூர்த்தியாக்கவில்லை... அடுத பதிப்ப்பில் ம்ழுமையாக்க முயட்சிக்கிரேன்
Go to the top of the page
 
+Quote Post
சாரா
post Jul 31 06, 07:33 AM
Post #3


மகாரதன்
***

Group: Administrators
Posts: 228
Joined: 20-April 06
Member No.: 66மோகன் பாக்கி கதை எங்க...
Go to the top of the page
 
+Quote Post
Guest_மோகன்*
post Jul 31 06, 08:45 PM
Post #4

Guests


....உண்மையாண உழைப்புக்கு பலன் உண்டு.....தொடைர்ச்சி-(3)

கன்னிப்பெண்கள் கூட்டம் கூட்டமாக குட்டபாவாடையில் அலைவதை லோகேஷ் மிகவும் அ நாகரீகமாகவே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.சிறிது நேரத்துக்கு பிறகு அவன் வந்த காரணத்தை கூறினான். நண்பன் கூரினான் டே லோகேஷ் எனக்கு நம் நாட்டைவிட்டு வெலியே போர்றதுக்கு மனமே இல்லை இந்த கஷ்டமான நிலையில் இருந்தும் கூட ஆனா உணக்கு எப்படிதான் மனசு வருதுன்னு தெரியல உண்னுடைய அந்த விலைமதிக்க முடியாத அழகான் கிராமத்தை விட்டுட்டு போறதுக்கு... அதுக்கு லோகேஷ் டேய் நீயும் என் கிராமத்துல ரெண்டு நாள் தங்கினால் மூனாவது நாள் நீயும் கிராமம் வேனாம்ன்னு வந்திடுவ என்றான் அவன். லோகேஷுடன் வாதாட விரும்பாத நண்பன் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.லோகேஷ் கூரினான் எனக்கு வெளி நாட்டுக்குப்போவதற்கு உதவி செய் என்றான். நண்பன் ஸாரிட எனக்கு இதகுரிச்சி எதுவும் தெரியாது எனக்கு தெறிந்த நபரிடம் அறிமுகம் செய்துவைக்கிரேன் என்று ஒரு நபரிடம் அரிமுகம் செய்துவைத்தான்.அவர் மூலம் லோகேஷ் வெளி நாட்டுமுகவரை சந்தித்தான்.முகவர் அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவனிடம் கூரினான். நீ வெளி நாட்டுக்கு போவதற்க்கு முழுசெலவு ரூபா எழுபத்தைந்தாயிரம். தற்போது ரூபா பத்தாயிரம் தரவேண்டும் பாஸ்ப்போட் செய்ய வேண்டும்,சமாதான நீதவானிடம் கையெழுத்து வாங்கனும் என்று பல காரணங்கள் கூரினான். இவனுக்கோ அதிர்ச்சி இவன் நினைத்து வந்தான் பத்து,இருபது ஆயிரங்களிள் வெளி நாடு போகலாம் என்று. தற்போது அவன் கையில் வங்கி சேமிப்புக்கணக்கில் இருந்து எடுத்த ஜந்தாயிரம் ரூபாதான் இருந்தது.அதை அந்த முகவ்வரிடம் குடுத்து விவரத்தை கூரினான். முகவர் பரவயில்லை மிகுதி காசு ஒரு மாதத்தில் தரவேண்டும் என்று கூறி மூன்று போட்டோக்கள் எடுத்துவிட்டு அவனை ஒரு மாதம் களித்து காசுடன் வருமாரு கூரினான். அவனும் சரி என்று கூரி கிராமத்துக்குப்போய் தன் தந்தையிடம் விவரத்தை கூரினான். காசின் தொகையைகேட்டு அவன் அப்பவுக்கு தலைசுற்றியது. தன் மகனிடம் கூரினான் டே லோகேஷ் இவ்வளவு காசு செலவுபண்ணி நீ யாருகிட்டயோ அடிமையா வாழனுமா அதை விட நம்ம வேலை எவ்வளவோ ஒசத்தி என்றார். அவன் விடுவதாக இல்லை. அப்பா வெளி நாட்டில நல்ல வெலையா எனக்கு கிடைக்க இருக்கு மாதம் பதினைந்தாயிரம் சம்பளமாக தருவார்களாம் என்று கூரினான். அவன் அப்பா அவனுக்கு எவ்வள்வோ கூரியும் அவன் அசைவதாக் இல்லை அந்த காசை அவனுக்கு எப்படியும் கொடுக்கவேண்டும் என்று அப்பா முடிவு செய்தா.
லோகேஷ் வங்கி கண்க்கில் இருந்த மிகுதி காசையும் தன் விதை நெல் வாங்க வைத்திருந்த காசையும் தன்மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்து விட்டார் அப்போதும் எவன் கேட்ட தொகையை தொட முடியவில்லை.அத்துடன் அவர் வயலை அடகுவைத்து காசு எடுத்தார் எலலாமாக அவன் கேட்டதைவிட ரூபா இரண்டாயிரம் கூடுதலாகவே இருந்தது. அனைத்தையும் குடுத்து அவனை வளி அனுப்பி வைத்தார்.அவன் நேரடுயாக முகவரிடம் போய் அவன் கேட்ட மிகுதி தொகையை கொடுத்தான். முகவர் கூரினான் இன்னும் மூன்று நாட்களில் நீ வெளி நாட்டில் இருப்பாய் என்று கூரி அவனை கொழும்பில் ஒரு லொட்ஜ்(வாடகை வீடு) தங்க வைத்தார். தங்குமிடம்,சாப்பாடு அனைத்துமே அந்த லொட்ஜில் கிடைத்தது.அவன் ஜாலியாக அந்த மூன்று நாட்களும் அவனுடைய கனவுக்கன்னிகளுக்கு சைடடித்துக்கொண்டு இருந்தான்....... (தொடரும்)

மோகன்.
(இலங்கை தமிழன்)
Go to the top of the page
 
+Quote Post
Guest_மோகன்*
post Aug 20 06, 10:59 PM
Post #5

Guests


.....உண்மையாண உழைப்புக்கு பலன் உண்டு......(தொடர்ச்சி - 4)

மூன்று நாள் முடிந்து விட்டது. அந்த லொட்ஜில் நடத்துனர் வந்து இவனிடம். ஏய் நீ இன்று இரண்டு மணிக்கு போக வேண்டும் இல்லை என்றாள் ஒரு நாளைக்கு ரூபா 250 தரவேண்டும். அதுவும் முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று கூரி சென்றார்.உடனே அங்கு இருந்து வெளி நாட்டு முகவரை தேடி போனான் முகவர் நிலையம் பூட்டப்பட்டு இருந்தது. அதன் அருகே இருந்த கடை காரனிடம் அந்த முகவரை குரித்து கேட்டான் அந்த கடைகாரன் கூரினான் அந்த முகவர் பெரும் ஏமாற்றுக்காரன் நிறைய பேரிடம் வெளி நாட்டுக்கு அனுபுவதாக கூரி காசு எடுத்து விட்டு மாயமாக மரைந்து விட்டான். இந்த கடையருகே வந்து எத்தனை பேர் வந்து அழுந்திட்டு போராங்க அவங்களை நினைக்க பாவமாக இருக்கிரது என்று ரொம்ப பரிதபமாக கூரினார். உடனே லோகேஷுக்கு என்ன செய்வதென்ரே புரியவில்லை. மனமுடைந்து போனான். அவனால் மீண்டும் கிராமத்துக்கு போவது இயலாத காரியமாக இருந்தது. காரணம் அங்கு அனைவரிடமும் வெளி நாட்டுக்குப் போகிரான் என்ற மமதையில் நடந்து கொண்டது மட்டுமல்லாது அமுத சுரபியாண வயலையும் மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் என்ற பெருமையில் அடகும் வைத்து விட்டான். அவனால் எப்படி போகமுடியும். தன்னுடைய நண்பனிடம் நடந்தவை எல்லாவற்றையும் கூரினான். நண்பன் அவனை பொலிசாரிடம் அழைத்துப்போனான் போய் நடந்தவை அனைத்தயும் எழுதி குடுத்து விட்டு ந்ண்பனிடம் கூரினான் இதபாரு லோகேஷ் நீ எதையும் நினைத்து கவலை படவேண்டாம் இது உனக்கு நல்ல பாடமாகத்தான் இருக்கும் ஏன்னா விவசாயம் என்கிரது ஒரு உன்னதமான தொழில் இதில் யாருக்கும் அடிமை என்கிரது இல்லை அதோட புண்ணியமான தொழிலும் கூட. மனிதன் உடுக்கிரதுக்கு உடுப்பு இல்லாமல் வாழலாம்,இருக்க வீடு இல்லமலும் வாழலாம் ஆனா உண்ண உணவில்லாமல் வாழ முடியுமா?? நிட்ச்சியமாக முடியாது இந்த உலகம் இவ்வளவு காலம் உலகம் இயங்குதுன்னா அதற்கு காரணம் உலவர்கள் தான். அவங்க எல்லாரும் சேத்துல கால வைக்க மாட்டேன் டை,கோர்ட் போட்டுதான் வேலை செய்வேன்னு சொன்னா நீயும் நானும் மட்டுமல்ல இந்த உலகமே அழிந்து பொய் இருக்கும். உலக அழிவை தடுக்கிர புன்னியம் உலவர்கழுக்குத்தான் இருக்கு. இந்த உலகம் என்றென்றும் அவங்கலுக்கு கட்டுப்பட்டு தலைகுனிந்துதான் இருக்கும். லோகேஷ் இத பாரு நீ திரும்ப உன கிராமதுக்கு போ. போய் உன் வயலில் பாடுபட்டு உழை நீ சிந்தும் ஒவ்வொரு வியர்வை துளியும் உனக்கு பொன்னா திருப்பி கிடைக்கும். அதோட உலகத்தை காபாத்துன பெருமையும் உனக்கு சேரும் என்று அவனை பஸ் ஏற்றி கிராமத்துக்கு அனுப்பி வைத்தான். லோகேஷ் மீண்டும் கிராமதுக்கே வந்து சேர்ந்தான். உடனே லோகேஷ் ஓடிச்சென்று தன் தகப்பனாரின் காலில் விழுந்து நடந்தவற்றை கூரி மண்ணிப்பு கேட்டான்.தந்தை கோபப்படவில்லை நீ திரும்ப வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ இப்போதாவது நம்ம மண்னின் பெருமையை புரிந்துகொண்டாயே அதுவே போதும் என்று கூரி அவனின் தோலில் தட்டி இவ்வள்வு நாள் நான் ஒற்றையாத்தான் இந்த வயலில் பாடு பட்டேன் இபோ நீயும் இருக்கிரதால நாம ரெண்டு பேரும் சேர்ந்து பாடுபட்டா ரெண்டு அறுவடையில் போன காசை பிடிக்கலம் என்று முகமலர்ந்து அன்புடன் கூரினார். அடுத்த நாள் காலை லோகேஷ் எழும்பியவுடன் ஏதோ புது உலகத்தில் இருக்கிர பிரமிப்பு இருந்தது. விடியலின் குயிலின் ஓசை அவன் காதில் தேனாய் பாய்ந்தது. இப்போது இந்த குயிலின் ஓசை அவனுக்கு எரிச்சலை தரவில்லை. பின்னர் வேட்டியை கட்டிக்கொண்டு தொளிலே துண்டுடன் கையில் மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு வயல் விளிம்பில் நடக்க அவன் எதிரே தர்ஷனி வைத்த கண் வாங்காமல் வலமையான புண்முறுவலுடன் வந்துக்கொண்டு இருந்தாள். இம்முறை லோகேஷ் வலமையாண ஆணவச் சிரிப்பு இல்லமல் முகம் மலர்ந்து தரை நோக்கியவண்னம் நடந்தான். தர்ஷனியை தாண்டி வெகுதூரம் சென்று விட்டான் ஆனாலும் தர்ஷனி வியப்பில் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் நின்றாள்..(முற்றும்)

இது என் சொந்த கட்பனை (IMG:http://www.kaathal.com/forums/style_emoticons/default/cool.gif)
Go to the top of the page
 
+Quote Post
சாரா
post Sep 3 06, 09:12 AM
Post #6


மகாரதன்
***

Group: Administrators
Posts: 228
Joined: 20-April 06
Member No.: 66மோகன் இது சிறுகதை இல்லை. நாவல் இன்னும் நான் இத முழுசா படிக்கல நண்பா. டைம் கிடைக்கும் போது படிச்சிட்டு கண்டிப்பா என்னோட விமர்சனத்தை பதிப்பிக்கிறேன்.
Go to the top of the page
 
+Quote Post
Guest_மோகன்*
post Sep 4 06, 10:33 PM
Post #7

Guests


மிகவும் நன்றி சாரா..
Go to the top of the page
 
+Quote Post
ka.dhanasekar
post Sep 9 06, 07:15 AM
Post #8


காலாட்படை
*

Group: Members
Posts: 1
Joined: 13-August 06
Member No.: 158kathai mika aruamai
Go to the top of the page
 
+Quote Post
Guest_Guest*
post Sep 10 06, 04:07 AM
Post #9

Guests


[color=#FF0000][size=5]
(IMG:http://www.kaathal.com/forums/style_emoticons/default/smile.gif) Mohan romba nalla kathai

Nalla moral solra mathiri irukku

And positive mind oda eluthi irukkinga ..Etha vachi solren na payan money ellathayum ilanthuddu vantha kooda avana thiiddavae illa..

Ok, vegu viraivil inoru arumaiyana kathaiya ethir parkiren

[color=#FF0000][size=5]
Go to the top of the page
 
+Quote Post
சாரா
post Sep 11 06, 10:50 AM
Post #10


மகாரதன்
***

Group: Administrators
Posts: 228
Joined: 20-April 06
Member No.: 66நல்ல கதை மோகன்...ஒரு நல்ல படைப்பாளியை இக்களம் பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. இன்னும் தங்கள் பதிவுகளை பதிக்க ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Go to the top of the page
 
+Quote Post
மோகன்
post Jan 30 10, 02:52 PM
Post #11


அதிரதன்
**

Group: Members
Posts: 63
Joined: 15-September 06
From: Dubai
Member No.: 185ரொம்ப மகிழ்சி அதிகமான காதல்.கம் வாசகர்கள் என் ஆகத்தை வாசித்ததுக்கு.


--------------------
Friendship Is Always A Sweet Responsibility
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 Lo-Fi Version Time is now: 26 Jul 17 - 12:29 AM